குவைத்தில் வேலைவாய்ப்புக்காக சென்று எஜமானர்களின் தொல்லைக்குள்ளான 48 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!
குவைத்தில் வீட்டு வேலைகளுக்குச் சென்று அங்கு தங்களது எஜமானர்களால் பல்வேறு தொல்லைகளுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 48 பணிப்பெண்கள் இன்று (22) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு இலங்கைக்கு அனுப்புவதற்காக 51 இலங்கையர்கள் குவைத் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களில் மூவரின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவர்கள் நாடு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு திரும்பியவர்களில் 38 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் உள்ளடங்குவர்.
கருத்துக்களேதுமில்லை