வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்

ஐந்தாம் வகுப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை 6ஆம் வகுப்பிற்கு பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

2022 இல் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூங்களிலான பாடசாலைகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் ஆகக் கூடிய புள்ளிகளாக கொழும்பு ரோயல் கல்லூரிக்கு 182 வெட்டுப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. கண்டி தர்மராஜ வித்தியாலயத்திற்கான வெட்டுப்புள்ளி 180 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழிமூல கலவன் பாடசாலைகளில் மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹைலன்ஸ் கல்லூரிக்கே அதிகூடிய வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய இக்கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 163 ஆகும். முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரிக்கு 152, மூதூர் மத்திய கல்லூரிக்கு 151, மாவனல்லை சாஹிரா கல்லூரிக்கு 151 என வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மூல ஆண்கள் பாடசாலையில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு 170 , டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிக்கு 161, இசிபத்தான கல்லூரிக்கு 158, ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு 155 மற்றும் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு 155 என வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதே போன்று தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலைகளில் கொழும்பு – முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 162 வெட்டுப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ் வேம்படி மகளிர் பாடசாலைக்கு 154, மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரிக்கு 152 , ஹட்டன் புனித கப்ரியல் மகளிர் கல்லூரிக்கு 147 என வெட்டுப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய சகல பாடசாலைகளுக்குமான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளத்திற்குள் சென்று பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.