கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சி, உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான மாவட்ட தொழிற்சந்தை நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் திறண்கள் அபிவிருத்திப்பிரிவு மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், திணைக்கள அதிகாரிகள், தொழில் வழங்கும் நிறுவனங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற தொழில் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கான ஆலோசனை வழிகாட்டல்களும், விற்பனை சந்தையும் , கண்காட்சியும் இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.