வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ். சாவகச்சேரி ஏ – 9 வீதி அரசடிச் சந்தியில் கப் ரக வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதனால் கப் ரக வாகனம் கடும் சேதம் அடைந்துள்ளது. இருந்த போதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அதை அடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.