கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின் தலைமுடி வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை!
கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் அவர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பருவத்தேர்வு தொழில்நுட்ப பாட தாளுக்கான விடைகளை எழுதும் முன்னர் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.
தலைமுடியை வெட்டிய பின்னர் அந்த மாணவர்கள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படாமல் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை