இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 633 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர்  இன்று (24) அதிகாலை சிலாபம் இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நின்ற லொறியொன்றினை சோதன க்குற்படுத்தியுள்ளனர்.

இதன்போது சூட்சுமமான முறையில் மறித்து வைத்திருந்த 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கி படகுகள் இரண்டு லொறிகள் ஒரு கார் ஒரு மோட்டார் சைக்கிள் கடத்தலில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள் சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு லொறிகள் கார், மோட்டார் சைக்கிள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.