சீர்குலைக்கும் தலையீடுகளை நிறுத்துங்கள் – ஜனாதிபதியிடம் வலியுறுத்து
நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடை உத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
83 சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள அவர்கள், நீதிமன்றக் கட்டமைப்பை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதியினாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் ஜனநாயக செயன்முறையைப் புறந்தள்ளும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ள அவர்கள், இது ஆபத்தான போக்கிலான அரசாங்கத்தின் செயற்பாட்டைக் காண்பிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகமுக்கியமான விடயம் என்றும் இவ்வாறானதொரு பின்னணியில் எவ்வித தாமதமுமின்றி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை