பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு
பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களைக் கட்டியெழுப்பும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் பொன்னகர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 21 இளம் குடும்பங்கள் அழைக்கப்பட்டு, வன்முறையற்ற மகிழ்வான குடும்ப வாழ்வை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இதன்போது, ஆரோக்கியமான வாழ்விற்கு இடையூறாக உள்ள விடயங்களை பரஸ்பரம் அறிந்துகொள்ளவும், வேறுபடுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக மகிழ்வான குடும்பங்களைக் கட்டியெழுப்ப முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை