தந்தை செல்வாவின் 125ஆவது ஜனன தின நிகழ்வு யாழில்!
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு மார்ச் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மலையக மக்களின் மனித உரிமைகள் எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை சமூக அபிவிருத்திக்கான நிறுவன நிர்வாக இயக்குநர் பெரியசாமி முத்துலிங்கம் மேற்கொள்ளவுள்ளார்.
தந்தை செல்வா நினைவுப் பேருரையை 13 ஆம் திருத்தச்சட்டம் மீதான ஒரு பிரதிபலிப்பு எனும் தலைப்பில் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் ஆற்றவுள்ளார்.
பேராசிரியர்.சி.பத்மநாதன் எழுதிய ‘தந்தை செல்வாவின் அரசியல் ஞானமும் சாதனைகளும்’ என்ற நூலும் கவிஞர் எ.எம்.எம்.அனஸ் ‘தந்தை செல்வா சீர்மை காவியம்’ எனும் கவிதை நூலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. நிகழ்வின் ஆரம்பத்தில் தந்தை செல்வா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை