2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு !!
2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட காலநிலை சுபீட்ச திட்டம் நாட்டின் காலநிலை ஸ்திரமின்மைக்கு மத்தியிலும் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவில் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன்றத்தின் மூலம், நிலையான வளர்ச்சி சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
கருத்துக்களேதுமில்லை