யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் புனரமைப்பதற்கு டக்ளஸ் நடவடிக்கை!
யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தை புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற் தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மத்திய கல்லூரியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாடநூல் விநியோக நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –
இந்த பாடசாலையினுடைய அதிபர் நீச்சல் தடாகத்தை மீள செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை மாணவர்களும் ஏற்றதன் காரணமாக இரு மாதங்களுக்குள் குறித்த நீச்சல் தடாகத்தினை மீள செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை