தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன!
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் சுகாதாரத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரச வைத்தியசாலைகளே தனிப்பட்ட கொடையாளர்களின் உதவியுடனே சாதாரண மக்களுக்கான மருத்துவசேவையைப் பெரிதும் ஆற்றுகின்றன.
அந்தவகையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தேவை கருதி சுழிபுரம் மேற்கு, சுழிபுரத்தைச் சேர்ந்த சபாநாயகம் சிவகுமார் குடும்பத்தினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியிலான அத்தியாவசிய மருந்துகளை வழங்கிவைத்தனர்.
இந்த மருந்துகளை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.றெமான்ஸ் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் சி.றமேஸ் ஆகியோர் வைத்தியசாலை சார்பாகப் பெற்றுக்கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை