கிளிநொச்சி மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் குழு நேற்றுக் கூடி ஆராய்வு! 

கிளிநொச்சி  மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லையிடப்பட்ட பகுதிகளில் விடுவிக்கபட வேண்டிய காணிகள் தொடர்பான விடயங்கள் திணைக்கள அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயல மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு, மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விடயங்கள் பிரதேச செயலாளர் ரீதியாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், கடந்த மாவட்ட மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தின் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும் பிரதேச செயலர் பிரிவு ரீதியாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லையிடப்பட்ட பகுதிகளில் விடுவிக்கபட வேண்டிய காணிகள் தொடர்பான விடயங்கள் குறித்த திணைக்கள அதிகாரிகளுடன்  ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர், பூநகரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.