தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நுரையீரல் பரிசோதனைப் பிரிவு திறப்பு!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நுரையீரல் மற்றும் ஆஸ்துமா தொடர்பான Lung function test ( Spirometer) சோதனைகளை மேற்கொள்வதற்கு உரிய பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.
இந்தத் தொகுதியை சுவாசநோய் சிரேஷ்ட வைத்தியநிபுணர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கௌரி செல்வரட்ணமும் (Senior Consultant Respiratory physician/ Senior lecturer) நன்கொடையாளர் சார்பில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபை உறுப்பினர், தொழிலதிபர் லயன் துரை பிரணவனும் இணைந்து திறந்துவைத்தனர்.
இந்த இயந்திரம் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டு, அதனை முறையாகப் பொருத்திப் பாவிப்பதற்குரிய அதி சக்தி வலு கொண்ட கணிணி இயந்திரம் திணைக்களத்தால் வழங்கமுடியாத நிலை இருந்தது. இதனால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நோயாளர்கள், அவர்களின் நுரையீரல் தொடர்பான உடல் தரத்தைப் பரிசோதிப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கே சென்று பரீட்சிக்கவேண்டிய அவலம் ஏற்பட்டது.
இந்த நிலை தொடர்பாக வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்களால் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரிடம் உதவி கோரப்பட்டது. இது தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வதியும் வைத்தியர் த.சொரூபனிடம் நோயாளர் நலன்புரிச் சங்கம் வைத்தியசாலையின் இந்த நிலை தொடர்பில் எடுத்துரைத்தபோது, அவர் உடளடியாக அதற்குச் சம்மதித்து 2 லட்சத்து 82 ஆயிரத்து 200 ரூபாவுக்கு அதி சக்தி வலு கொண்ட கணிணி ஒன்றை நலன்புரிச்சங்கத்தின் ஊடாக வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை