28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய 4 பேர் விமான நிலையத்தில் கைது

சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நான்கு பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை, விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

11 கிலோ கிராம் எடையுடைய 24 கரட் தங்கம் நுட்மான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு விமான சேவையொன்றுக்கு சொந்தமான விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை குறித்த முகாமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

முகாமையாளர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏழு கிலோ கிராம் எடையுடைய தங்கத்துடன் விமான நிலையத்தில் வைத்து மூன்று இந்தியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூர் அல்லது டுபாயிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.