மாணவர்களின் கல்விக்கு தடையேற்படுத்த முடியாது ; உரியவர்கள் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு வலயப் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அரச பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு வலயத்திற்கு ஏற்பட்ட ஏ9 வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் ஏற்றாது செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மாணவர்களின் கற்பதற்கான உரிமையை பறிப்பதற்கோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதற்கோ துணை நிற்பதை அனுமதிக்க முடியாது.

ஏ9 வீதியில் பயணிக்கும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்கனவே செல்வது தொடர்பில் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் உரிய தரப்பினர்களை நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளேன்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்தி அலுவலகமும் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்காமல் இருப்பதற்கு உரிய தரப்பினர் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.