இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு: ஜூலி சங்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரகத்தின் முதலாவது அவுருது பொல – புத்தாண்டு சந்திப்பை விளம்பரப்படுத்தும் முகமாக வெளியிட்ட ருவிட்டர் பதிவில் ஜூலி சங் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் –
இந்த புத்தாண்டு சந்தை, உள்ளூர் மற்றும் பெண்களுக்குச் சொந்தமான வணிகங்கள் உட்பட 40 விற்பனையாளர்களுக்கு தங்கள் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
இந்த நிலையில் உள்ளூர் வணிகங்களுக்கான வாய்ப்புகளை எளிதாக்குவது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் ஒரு வழியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை