4 பிள்ளைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை – சைவ மகா சபை
நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று, தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் (05) புதன்கிழமை ஆரம்பித்துள்ளது.
அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான சாந்தை பண்டதரிப்பை சார்ந்த கடம்பன் அசுவினி தம்பதியினர் ஐந்தாவது குழந்தையான சிவாத்மிகலனை பெற்றெடுத்தமைக்காக ஊக்க தொகை மற்றும் சத்துமா என்பன சைவ மகா சபை தலைவர் சண்முகத்தினத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
5 வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் கொரோனா பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் தடைப்பட்டு இருந்தது.
இத்திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நல்லுள்ளங்கள் சைவ அறப்பணி நிதிய வங்கி கணக்கு ஊடாக உதவ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை