தொகுதி பங்கீடு குறித்த முடிவை அடுத்தே கூட்டணி குறித்து முடிவு – அண்ணாமலை
தொகுதி பங்கீடு குறித்த முடிவை அடுத்தே கூட்டணி குறித்து முடிவு வெளியிடப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் தனக்குத் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம் கிடையாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அத்தோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தான் பேசியதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கட்சி கூட்டத்தில் எவ்வாறான கருத்துக்களை வெளியிட்டாலும் இன்றைய நிலையில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் அளவிற்கு பாஜகவை வலுப்படுத்துவதே எங்கள் இலக்கு என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை