சனத் விசாரணைக்கு அழைப்பு சர்வதேச அமைப்புகள் கவலை 

சுயாதீன ஊடகவியலாளர் இராமசந்திரன் சனத்தை சிஐடியினர் விசாரணைக்கு அழைத்திருப்பது தொடர்பாகவும் அவர் துன்புறுத்தப்படுவது குறித்தும் புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் என்ற சர்வதேச அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான ராமசந்திரன் சனத்தை நேற்று (வியாழக்கிழமை) நுவரேலியா மாவட்ட பயங்கரவாத விசாரைணை பிரிவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என மனித உரிமை பாதுகாவலர்கள் உரிமைகள் குறித்த சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்டியின் உள்ள இல்லத்துக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. டிஐடியினர் இதற்கான காரணங்களை வெளிப்படுத்த மறுத்துள்ளனர் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ராமசந்திரன் சனத் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் தொடர்பாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் கரிசனை கொண்டுள்ளது இந்த நடவடிக்கை அவரது பத்திரிகை தொழில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பானது எனக் கருதுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.