இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக தகவல்!
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை அடைய சீனா தனது பணியை விரைவுபடுத்த வேண்டும் எனவும் சீனாவின் புதிய உயர்மட்ட பொருளாதார அதிகாரி லி கியாங்கிடம், ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன்களை கையாள்வதற்கு சீனா பல நிறுவனங்களைக் கொண்டுள்ளமையால், தாமதங்கள் ஏற்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீனா தமது பங்கேற்பை விரைவுபடுத்த வேண்டும் என கோரியுள்ளதாக ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை