கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் விபத்து : சாரதி கைது!
கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக சொகுசு கார் ஒன்று இன்று (07) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த வாகனத்தைச் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை