ஜனாதிபதி ரணில் சிறப்பாக செயற்படுகின்றார் – எதிர்க்கட்சி எம்.பி. பாராட்டு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்படுகின்றார் என்றும் இதனை பொதுமக்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை தாம் முழுமையாக மறுப்பதாகவும் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த வாரம் இதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு சாதகமாகப் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பௌசியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை