யாழில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா!
வடக்கு மாகாணம் என்பது கல்வியில் சிறப்பு வாய்ந்த மண் என பிரபல புலம்பெயர் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரியின் அறுபதாவது ஆண்டு விழா கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
இதன்போது நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. குறித்த நூலின் முதலாவது பிரதியை விழாவின் பிரதம விருந்தினரான யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவிடமிருந்து புலம்பெயர் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ். மாவட்டம் என்பது பெருமை வாய்ந்த மண். வடக்கு மாகாணம் என்பது கல்வியில் சிறப்பு வாய்ந்த மண்.
1960 மற்றும் 70 களில் இங்கிருந்து ஏராளமான மக்கள், புத்திஜீவிகள் மலேசியா சிங்கப்பூர் மொரீசியஸ் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கல்விமான்களாகச் சென்று இன்றுவரையும் தமது தகைமைகளை அந்தந்த நாடுகளுக்கு தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை