சீனாவின் கடன் மறுசீரமைப்பு அமெ. நம்பிக்கை தெரிவிப்பு!
இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா ஒப்புக் கொண்ட நிலையில், தாம் அதில் நம்பிக்கையுடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்பதற்கான சீனாவின் தீர்மானம், நம்பிக்கைக்குரிய அறிகுறி என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய வங்கியாளர்கள், நிதி அமைச்சர்கள் மற்றும் 180 இற்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களுக்கு அமெரிக்க தலைநகரில், எதிர்வரும் வாரத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இதன்போது இலங்கையின் விடயமும் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை