பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அஞ்சத்தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் அங்கு உரையாற்றியஅபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை முடக்குவதற்கு அன்று கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட இச்சட்டம் குறித்து கவலையடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சட்டங்கள் அவசியமாகும் என்றும் இதனை அமெரிக்கா உட்பட பல நாடுகள் கைகொண்டுள்ளன என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

ஆகவே நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் இவ்வாறான சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.