வீதியில் நின்ற 10 வாகனங்கள் மற்றும் வீடொன்றின் மீது மோதிய கிரேன்; 4 பேர் படுகாயம் : கல்எலியவில் சம்பவம்!

ஸ்யால – மீரிகம வீதியின் கல்எலிய நகரில் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்களோடு கிரேன் ஒன்று மோதியதுடன், அது மதில் மற்றும் கதவுகளை உடைத்துக்கொண்டு சென்று  வீடொன்றின் மீதும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

பஸ்யாலயிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த  கிரேன் வாகனம் மக்கள் நெரிசல் மிகுந்த கல்எலிய நகர வீதியில் அதிவேகமாக பயணித்து, வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

அத்தோடு அந்த கிரேன் வாகனம் ஒரு வீட்டின் மதில் மற்றும் கதவுகளையும் உடைத்துக்கொண்டு சென்று, வீட்டின் மீது மோதியபடி நின்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.