போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே பிரதான காரணர்! சுமந்திரன் எம்.பி. சாடல்
இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் –
அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்தாமையால் சிறுவர்களும் இளைஞர்களும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை முழுமையாக கைதுசெய்யப்படவில்லை. இதில் ஆட்சியாளர்களின் தலையீடு காணப்படுகின்றது.
போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பது மிகவும் கடினமான விடயமாக இருப்பதால் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை