தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்தில் சிக்கியதில் இருவர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனம்  ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் சாரதி மற்றும்  உதவியாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரம்புகெதர, களுகமுவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதசாரிகள் இருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இரு பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பின்னால் சென்றவர் ஆகியோர் வீரம்புகெதர மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போது  ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.