கி/பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலய திறனாய்வுப் போட்டி இன்று நடந்தது!
கிளிநொச்சி பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஒரு மணிக்கு கல்லூரி முதல்வர் லயன் கு.லெனின்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்குமாரும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தனும், கௌரவ விருந்தினர்களாக பூநகரி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.கணேஸ்வரநாதன், கொழும்பு விவேகானந்தசபை கலாசார செயலாளர் லயன் சு.சந்திரசேகர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி நோர்வே பழைய மாணவர் ஒன்றியத் தலைவர் கா.நிர்மலநாதன், பூநகரி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ப.சிந்துஜன், செ. விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை