பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்து!

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுவர்கள் பட்டாசு வெடித்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.