குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் சித்திரை புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சோபகிருது என்ற பெயருடன், சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று பிற்பகல் 2 மணி 3 நிமிடத்திலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, பிற்கல் 2 மணி 59 நிமிடத்திலும் பிறந்துள்ளது.
இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, இளைய புதல்வர், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை