களுத்துறையில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
களுத்துறை பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் வீடுக்கு சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற ஓட்டோ ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஓட்டோ முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் அக்கலவத்தைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளாகக் கூறப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை