உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்கள்!

இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 விமானங்கள் பல மாதங்களாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 24 எயார்பஸ் விமானங்கள் உள்ளதாகவும், அவற்றில் A 330-200 மற்றும் A 330-300 ரகத்தைச் சேர்ந்த 12 விமானங்கள் நீண்ட தூரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 12 விமானங்கள் குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும், A320, A321, A320, A321 NEO மற்றும் W321NEO வகையைச் சேர்ந்த விமானங்களே குறுந்தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய A320 NEO ரக விமானங்கள் இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

188 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய W321 NEO ரகத்தைச் சேர்ந்த 4 விமானங்கள் உள்ளதாகவும், அவற்றில் தற்போது 3 விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் நிறுத்த வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் உதிரி பாகங்களின்றி நிறுத்தப்படுவதால் விமான சேவைக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.