கிளிநொச்சியில் புதையுண்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட எறிகணை!

கிளிநொச்சி-விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த வாரம் வீட்டுக்கு அத்திபாரம் வெட்டும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம் கானப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விவேகானந்த நகர் தாய் தந்தையை இழந்த சிறுவன் ஒருவருக்கான வீட்டை ஒருவரின் உதவி மூலம் அமைக்கும் பொருட்டு கடந்த வாரம் அத்திபாரம் வெட்டப்பட்டுள்ளது.

இதன் போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம் கானப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பகுதி கிராம அலுவலருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் இராணுவத்தினர் கண்ணிவெடியகற்றும் பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த எட்டு நாள்களுக்கு மேலாக குறித்த வெடிபொருள் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.