பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை சவாலுக்குட்படுத்துவேன் – பீரிஸ் : எதிர்கொள்ளத் தயார் – சாகர
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியாகும் தன்மை ஆகியவற்றை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
கட்சி யாப்புக்கு அமையவே பொதுச்சபை கூட்டம் இடம்பெறும். கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால், சட்டத்தின் ஊடாக அதை எதிர்கொள்வோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பதிலளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டம் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் சனிக்கிழமை (22) நெலும் மாவத்தையில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள பொதுச்சபை கூட்டம் கூட்டத்தில்; கலந்து கொள்ளுமாறு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்,பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸூக்கு கடந்த 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபை கூட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியாகும் தன்மை ஆகியவற்றை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
கட்சி யாப்புக்கு அமையவே பொதுச் சபை கூட்டம் இடம்பெறும்.தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் அதை சட்டத்தின் ஊடாக எதிர்கொள்வோம் என சாகர காரியவசம் பதிலளித்துள்ளமை குறிப்பித்தக்கது.
கருத்துக்களேதுமில்லை