ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : விசாரணை வேண்டும் என்கின்றார் சாணக்கியன்
அசாத் மௌலானாவின் கருத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது என அவரது முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானாவின் கருத்து தெரிவித்திருந்தார் என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
4 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் விசேட ஆராதனை நேற்று நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஒரு கட்சியாக நாங்கள் போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை