பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகக் கையொப்பங்கள் திரட்டல்
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிரான கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் நேற்று காலை கிளிநொச்சி சேவைச்சந்தை பிரதான வாயிலில் இடம்பெற்றதுஃ கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் மக்கள் பலரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.
மேற்படி கையொப்ப பிரதிகளானவைஇ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை