வெகு விரைவில் புதிய ரணில் பாதை! பந்துல உத்தரவாதம்
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
‘நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் சேவை தேவையாக உள்ளது. எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை ரயில் நிலையத்துக்கு இடையில் ரயில் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய ரயில் பாதையும் நிர்மாணிக்கப்படும்.
நுவரெலியாவில் இருந்து கொழும்புவரை மரக்கறிகளை கொண்டு வருவதற்கு நானுஓயா ரயில் நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார மத்திய நிலைய பிரிவொன்று அமைக்கப்படும்’ என அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நானுஓயா ரயில் நிலையத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர், நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து எல்லவரை செல்வதற்கு காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடினார்.
கருத்துக்களேதுமில்லை