சுற்றுலாத்துறை பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் 22 ஆம் திகதி சனிக்கிழமை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது இனிவரும் காலங்களில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுடன் சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கான தீர்வுகளை வழங்குமாறும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.