நெல் விவசாயிகளுக்கு உரக் கொள்வனவுக்காக நிதி மானியம் – அமைச்சர் மஹிந்த அமரவீர

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதி மானியம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் உற்பத்தி செலவினைக் குறைப்பதற்காகவே இந்த நிதி மானியம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய ஒரு ஹெக்டயரில் நெற் செய்கையை முன்னெடுக்கும் விவசாயிகளுக்கு 20 000 ரூபாவும் , இரு ஹெக்டயருக்கு 40 000 ரூபாவும் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய 5 இலட்சத்து 50 000 விவசாயிகளுக்கு இந்த நிதி மானியத்தை வழங்குவதற்காக 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சேதனப் பசளை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதோடு , யூரியா உர மூடையொன்று 10000 ரூபாவுக்கும் வழங்கப்படவுள்ளது.

ஏனைய உரங்களின் விலையை 4500 ரூபாவால் குறைப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.