சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை சில நாள்களில் பாதுகாப்பாக வெளியேற்றலாம்! அலிசப்ரி நம்பிக்கை

சூடானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அடுத்த சில நாள்களில் பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  தெரிவித்துள்ளார்.

ருவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுகளுக்கு முன்னுரிமை வழங்குவதே சாத்தியமான நிரந்தரமான தீர்வு எனத் தெரிவித்துள்ள அலிசப்ரி, சூடான் மக்களுக்கு அமைதி, சமாதானம், ஸ்திரதன்மை, முன்னேற்றம் போன்றவை கிட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாகக் கவனம் செலுத்துகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தில் இந்தியா வழங்கிய உதவிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு சில நாள்களில்  சூடானில் சிக்குப்பட்டுள்ள இலங்கையர்களை  பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.