பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் ஐ.எம்.எவ்விpன் நிபந்தனையா? நளின் சபையில் கேள்வி
அரசாங்கம் தனது தேவைக்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்ற விதிகளை கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், குறித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றே தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் நாட்டை திவாலாக்கியது என்றும் ஊழல் வாதிகளால் சூழப்பட்டுள்ள அரசாங்கமே தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டை அதல பாதாளத்துக்குக் கொண்டு சென்றவர்கள் ராஜபக்ஷர்களே என்றும் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய புதிய அரசாங்கம் தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்தும் சட்டங்களை உருவாக்குவதற்குப் பதிலாக இவ்வாறு செயற்படுகின்றமை தொடர்பாக அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை