வசந்த கரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடைக்கு ரஸ்யா அதிருப்தி! 

இலங்கை உட்பட இறைமையுள்ள எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசுகின்றோம், அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறான நிலை காணப்படுகின்ற போதிலும்  இலங்கை போன்ற நாடுகளிள் உள்விவகாரங்களில் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எதனை செய்யவேண்டும் எதனை செய்யக்கூடாது என உங்களுக்கு பாடம் நடத்துவதற்கு – இலங்கைக்கு எவருக்கும் உரிமை இல்லை  – இது உங்களின் உள்விவகாரம் என ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல் எறியக்கூடாது என ஆங்கிலத்தில் தெரிவிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.