மூத்த கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்

இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் மதுரையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காலமானார்.

அன்னார் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர்.

அவரது மறைவிற்கு இலங்கையின் மூத்த கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.