வரணியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சத்தியநாதன் சத்தியானந் என்பவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை