கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் படுகொலை : சந்தேக நபர் நஞ்சருந்திய நிலையில் கைது!
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வரக்காபொலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையை தொடர்ந்து சந்தேக நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சி கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி வண்ணாத்துவில்லுவ பிரதேசத்தில் அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை