புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த மகாநாயக்கர்களின் கரிசனைக்கு பதிலில்லை! அரசைச் சாடுகிறார் ஒமல்பே தேரர்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு அரசாங்கம் இன்னமும் பதில் அளிக்கவில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பிற்கு முரணாண சிலவிடயங்களை மாற்றவேண்டும் அல்லது புதிய சட்டமூலத்தை உருவாக்கவேண்டும் என பௌத்த மகாநாயக்கர்கள் உட்பட பலதரப்பினர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோள்களிற்கு இதுவரை பதில் வழங்கப்படாதமை தொடர்பாக ஒமல்பே சோபித தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி பௌத்தமட பீடாதிபதிகளுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஒமல்பே சோபித தேரர் பௌத்தமத பீடாதிபதிகள் மாத்திரமின்றி சிவில் சமூகத்தினர் உட்பட பல தரப்பினர் குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பாகக் கவலை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி உட்பட உரிய தரப்பினரிடம் அதனைத் தெரிவித்துள்ளனர் எனினும் இதற்கு அதிகாரிகள் பதிலளிக்காதமை கவலையளிக்கும் விடயம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் பொலிஸார் பயங்கரவாதத்துக்கு தங்கள் விருப்பத்தின்படி அர்த்தம் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள ஒமல்பே சோபிததேரர் இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை