தென்பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவின் 21 ஆவது கூட்டத்தொடருக்கான தலைவராக மொஹான் பீரிஸ் நியமனம்

தென்பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவின் 21 ஆவது கூட்டத்தொடரின் தலைவராக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைப்பு ரீதியான கூட்டத்தின்போதே மொஹான் பீரிஸை தலைவராக நியமிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கடந்த 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தென்பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய மொஹான் பீரிஸ், தென்பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவானது உலகளாவிய ரீதியில் தென்பிராந்திய நாடுகள் அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திறம்பட முன்னெடுத்துச்செல்வதற்கும் காலநிலை மாற்றம், சுகாதாரம், சக்திவலு, உணவுப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைசார் சவால்களை உரியவாறு கையாள்வதற்கும் பல்வேறு வகையில் பங்களிப்புச்செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

தென்பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான உயர்மட்டக்குழுவின் 21 ஆவது கூட்டத்தொடர் ‘கொவிட் – 19 பெருந்தொற்றின் பின்னரான மீட்சியைத் துரிதப்படுத்தலும் தென்பிராந்திய ஒத்துழைப்பின் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்குரிய நிலைபேறான அபிவிருத்தி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தலும்’ என்ற தொனிப்பொருளில் இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் ஜுன் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.