ஜூலையில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் – அமைச்சர்

இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய, மின்சார விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டண விலையை ஆண்டுக்கு இருமுறை மறுஆய்வு செய்து திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.